தேவபிரசன்னம் தொடங்கியது மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் சீரமைப்புக்கு 85 லட்சம் ஒதுக்கீடு: ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் சேகர்பாபு பேட்டி

குளச்சல்: தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் சீரமைப்புக்கு 85 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கடந்த ஜூன் 2ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோயில் கருவறை மேற்கூரை சேதமானது. இந்தநிலையில் நேற்று கோயிலில் தேவபிரசன்னம் தொடங்கியது.  அங்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் அரவிந்த் முன்னிலையில் ஆய்வு செய்தார். தேவ பிரசன்னம் நடத்தியவர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: தேவ பிரசன்னத்தில் எடுத்து வைக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில் அத்தனை பணிகளையும் உடனடியாக முடிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக ரூ.85 லட்சம் முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகளை தொடங்க உள்ளோம். எந்த வகையிலும் பக்தர்கள் மனது புண்படாமல் புதுப்பொலிவுடன் உருவாக்கி தர வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  ஆகம விதிகளின்படி பயிற்சி பெற்றவர்களையே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டத்தில் அர்ச்சகராக நியமிப்போம் என்றார்.

தேவபிரசன்னத்தில் அதிர்ச்சி தகவல்கள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் தேவபிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்ட முக்கிய தகவல்கள் வருமாறு: அம்மனுக்கு படைக்கப்படும் மகா நைவேத்தியம் சுத்தமாக இல்லை. பூஜாரிகளும் ஒழுங்காக பூஜை செய்யவில்லை. கோயிலில் சுத்தமான குடிநீர் இல்லை. தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பு புற்றில் கேடு இருந்துள்ளது. அதனை சுத்தமான சந்தனத்தால் நிவர்த்தி செய்ய வேண்டும். பூஜை காரியங்கள் முறையாக இல்லை. நல்ல காரியம் செய்ய கோயிலுக்கு வந்தாலும் தடை செய்கிறார்கள். கோயில் அசுத்தமாக உள்ளது. கோயிலை சுற்றி நாக நடமாட்டம் அதிகமாக உள்ளது.  இங்கு பூஜாரிகள் வேத ஜெபம் ஜெபிப்பது இல்லை. ஆச்சாரிய அனுஷ்டானங்கள் முறையாக பின்பற்றப்பட வில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: