தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது..!!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி இருக்கிறது. இன்று காலை சென்னை அசோக்நகரில் இருக்கக்கூடிய அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கியிருக்கிறது. இதில் ஏராளமான மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களுடைய விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வருகின்றனர். ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், மாணவர் சேர்க்கையை நடத்தி கொள்ளலாம் என அரசு தெரிவித்திருக்கிறது. 

மேலும் மாணவர்களுக்கான மாற்று சான்றிதழ் வழங்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் பணிகளை தொடரவும் ஆணையிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 11ம் வகுப்பு  மாணவர் சேர்க்கை பல்வேறு பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேல்நிலை பள்ளிகளில் 11ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை 9ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. 

Related Stories:

>