பொதுப்பணித்துறை 2ஆக பிரிக்கும் பணி துவக்கம்

சென்னை: தமிழக பொதுப்பணித்துறை மூலம் கட்டுமானம் மற்றும் நீர்வள பிரிவு ஆகிய இரண்டு அமைப்புகள் உள்ளது. இதைத் தொடர்ந்து திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் நீர்வளத் துறைக்கு தனியாக துரைமுருகன் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். அதே போன்ற கட்டுமான பிரிவு என அமைச்சர் ஏ.வ.வேலு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த இரண்டு துறைகளும் தனியாக பிரிக்கப்பட்டாலும் நிர்வாக ரீதியில் ஒரே அமைப்பாக தான் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கட்டுமானம் மற்றும் நீர்வளப் பிரிவை இரண்டாக பிரிக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அறிக்ைகயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>