கொரோனா 2 வது அலையின் போது பிரதமர் மோடி அரசின் திறமையின்மையால் இந்த நாடே துயரங்களை சந்திக்க நேர்ந்தது: காங். குற்றச்சாட்டு !

டெல்லி : கொரோனா தொற்று 2 வது அலையின் போது பிரதமர் மோடி அரசின் திறமையின்மையால் இந்த நாடே துயரங்களை சந்திக்க நேர்ந்தது என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த போர்கால அடிப்படையில் பொது சுகாதார திட்டத்தை அறிவித்து இருக்க வேண்டிய மத்திய அரசு பிரதமரின் மாய புகழ் பிம்பத்தை காப்பதிலேயே கவனமாக இருந்தது.

 இந்த அரசின் திறமையின்மையால் நம் சகோதரர்களை இழந்துள்ளோம். இதை என்றைக்கும் மறக்க மாட்டோம் என காங்கிரஸ் கட்சி டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து, யார் பொறுப்பு? என்ற ஹேஷ்டேக் உடன் பல்வேறு காங்., தலைவர்களும் சமூகவலைதளங்கள் வாயிலாக பா.ஜ., மீது குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ், எம்.பி., ராகுல் கூறியுள்ளதாவது: பெருந்தொற்று பணவீக்கம் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருப்பது யார் என்பதை மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர் என்று  அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>