அடுத்தடுத்து அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாட்டில் 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு !

சென்னை: தமிழ்நாட்டில் 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நாகை ஆட்சியராக உள்ள பிரவீன் பி.நாயர் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக உள்ள அண்ணாதுரை வேளாண்துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூட்டுறவுத்துறை பதிவாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக உள்ள கோவிந்தராவ் குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை ஆட்சியர் நாகராஜன் நில நிர்வாக ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சுற்றுலாத்துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நகராட்சி நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் ஆட்சியர் ரத்னா சமூக நலத்துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். சமக்ரா ஷிக்ஷாவின் மாநில திட்ட இயக்குநராக ஆர்.சுதன் மாற்றப்பட்டுள்ளார். நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநராக சரவணவேல்ராஜ் மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக மரியம் பல்லவி பல்தேவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழில்நுட்ப கல்வி இயக்குநராக லட்சுமிபிரியா, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக லதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையராக வள்ளலார் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆவின் மேலாண் இயக்குநராக கந்தசாமி, சிஎம்டிஏ உறுப்பினர் செயலராக அன்சுல் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். மாநில வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினர் செயலராக பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநராக வினய் நியமிக்கப்பட்டுள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இயக்குநராக ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநராக அமுதவல்லி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண் இயக்குநராக தட்சிணாமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண் இயக்குநராக விஜயராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பேரூராட்சிகளின் இயக்குநராக செல்வராஜ், எல்காட் நிறுவன மேலாண் இயக்குநராக அஜய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>