முதுமலை முகாமில் 28 யானைகளுக்கும் கொரோனா இல்லை: ஆய்வில் முடிவு

ஊட்டி: நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் உள்ளன.  சமீபத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, முதுமலை தெப்பக்காடு, டாப்சிலிப் கொழிகமுத்தி முகாம்களில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு கடந்த 8ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது இதன் முடிவுகள் வெளியாகியுள்ளன.  இது குறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கிருஷ்ணகுமார் கவுசல் கூறுகையில், ‘‘முகாமில் உள்ள 28 யானைகளுக்கும் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. தெப்பக்காடு முகாமில் தொடர்ந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கடைபிடிக்கப்படும்’’ என்றார்.

Related Stories:

>