தமிழகத்துக்கு 4.26 லட்சம் தடுப்பூசி வந்தது

சென்னை: தமிழகத்துக்கு 4.26 லட்சம் டோஸ் தடுப்பூசி சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. தமிழகத்துக்க தேவையான  1.26 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள், 25 பார்சல்களில் விமானம் மூலம் நேற்று காலை 9 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தது. மேலும், நேற்று மாலை 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 25 பார்சல்களில் புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று சென்னை பழைய விமான நிலையம் வந்தது. தடுப்பூசிகள் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ்ஸில் உள்ள மாநில மருந்துகள் சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

Related Stories: