அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த அரசு திட்டம்; 14-ம் தேதி முதல் மாணவர் சேர்ககை

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வருகிற 14-ம் தேதி முதல் தொடங்குவதற்கான நடைமுறைகளை பள்ளி கல்வித்துறை செய்துள்ளது. தலைமை ஆசிரியர்கள், ஊழியர்கள் 14-ம் தேதி பள்ளியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக மாணவர் சேர்க்கை முறையாக நடைபெறவில்லை. பாதிப்புக்கு பிறகு வருகிற 14-ம் தேதி முதல் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஆயத்த பணிகளை செய்ய வேண்டும். அதற்காக தலைமை ஆசிரியர், நிர்வாக ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

21-ம் தேதியில் இருந்து பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில் மற்ற வகுப்புகளுக்கும் மாணவர்களை சேர்ப்பதற்கும், சத்துணவு சாப்பிடக்கூடிய மாணவர்களுக்கு அதற்கான உணவு பொருட்களை வழங்கவும், பள்ளிக்கு ஆசிரியர்கள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைபோல கூடுதலாக மாணவர் சேர்க்கை நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து பெற்றோர்களுக்கு வீடு வீடாக சென்று எடுத்துரைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: