சிவகங்கை கலெக்டர் ஆபீசில் பார்க்கிங்கில் பயமுறுத்தும் மேற்கூரை-‘டச் அப்’ வேலை மட்டும் செய்வதாக புகார்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்திற்கான கலெக்டர் அலுவலகம் திருப்புத்தூர் சாலையில் அமைக்கப்பட்டு கடந்த 1988ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இங்கு கலெக்டர் அலுவலகம் மட்டுமின்றி எஸ்பி, கல்வி, மின்வாரியம், வனம், கருவூலம், தொழில் மையம், வேளாண் மையம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் உள்ளன. கலெக்டர் அலுவலகத்தில் துறை அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு சுமார் 32 ஆண்டுகள் ஆகிவிட்டதால் சேதமடைந்த நிலையில் இருந்து வருகின்றன.

கல்வித்துறை, கருவூலம், கலெக்டர் அலுவலகத்தின் வெளிப்புற பகுதி, வனத்துறை அலுவலகங்களில் வெளிப்புற சிலாப்புகள் அவ்வப்போது உடைந்து விழுந்து வருகின்றன. அலுவலகங்களில் உள்ள தரைத்தளங்களும் சேதமடைந்து பள்ளங்களாக காட்சியளிக்கின்றன. மேலும் கழிப்பறைகள், கழிப்பறை கதவுகள் அனைத்தும் சேதமடைந்து பராமரிப்பின்றி உள்ளன.

இந்நிலையில் ஒவ்வொரு துறை அலுவலகத்திற்கு எதிரே கட்டப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்கள் கடுமையாக சேதமடைந்த நிலையில் உள்ளன. இதில் உள்ள கான்கிரீட் மேற்கூரைகள் அவ்வப்போது உடைந்து விழுந்து வாகனம் நிறுத்த வருபவர்களை அச்சுறுத்தி வருவதுடன், வாகனங்களும் சேதமடைகின்றன. மேற்கூரை உடைந்தால் உடைந்து விழுந்த பகுதியை மட்டும் அவ்வப்போது சீரமைத்து பெயிண்டிங் செய்து விடுகின்றனர்.

அலுவலர் ஒருவர் கூறியதாவது: கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டிடங்களின் கான்கிரீட் மேற்கூரைகள், சிலாப்புகள் உடைந்து விழுவது வாடிக்கையாக உள்ளது.

குறிப்பாக வாகன நிறுத்துமிடங்கள் மிக மோ சமாக உள்ளது. புதிய கட்டிடங்கள் கட்டாமல் தொடர்ந்து டச்அப் வேலைகள் மட்டுமே செய்வதால் பயனில்லை. எனவே உயிர்சேதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் சேதமடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடங்கள் அக ற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: