ஒன்றிய அரசு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை 2,500 ஆக அறிவிக்க வேண்டும்: கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை:  தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கே.வி.ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நெல் குவிண்டால் ஒன்றுக்கு 72 உயர்த்தி, 1940 என விலை நிர்ணயம் செய்து அறிவிப்பு செய்துள்ளார்.  இந்த கொரோனா கால சவாலான நேரத்தில் கூட பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு  வேளாண் பயிர் சாகுபடி செய்து, ஏறி வரும் விலைவாசி, பயிர் சாகுபடி செலவுகள் போன்றவைகள் மேலும் மேலும் உயர்ந்து வருவதை கருத்தில் கொள்ளாமல், இந்த நெல் விலை அறிவிப்பு செய்துள்ளது மிகுந்த வேதனையை தருகின்றது.  மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எம்.எஸ்.சாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி விலை நிர்ணயம் செய்வோம் என்றும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்றும் உழவர்களை ஏமாற்றி உள்ளது பாஜ அரசு. உழவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துள்ளது. இதனை மறுபரிசீலனை செய்து மறு விலையாக 2500 அறிவிப்பு செய்ய வேண்டும்.

Related Stories: