பகவதியம்மன் கோயிலில் அடுத்த வாரம் தேவ பிரசன்னம்

குளச்சல்: குமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் கடந்த 2ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கருவறை மேற்கூரை எரிந்து நாசமானது. இதையடுத்து கோயிலில் இரும்பிலான தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.  இது நாளை (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறும் என கூறப்படுகிறது. இதையடுத்து பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று கோயிலில் அடுத்த வாரம் தேவ பிரசன்னம் பார்க்க குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி தேவ பிரசன்னம் பார்ப்பதற்கு 9 கேரள தந்திரிகளை கோயில் நிர்வாகம் அழைத்துள்ளது. இவர்களின் பெயரை அம்மன் சன்னதியில் குலுக்கிப்போட்டு, அதில் ஒருவரை தேர்வு செய்து, அவரே தேவ பிரசன்னம் பார்ப்பார். அதன் அடிப்படையில் பரிகார பூஜை நடைபெறும் என தெரிகிறது.

Related Stories: