முக்கிய செய்தி சென்னை முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் பாலியல் வழக்கு: உதவியாளர் மற்றும் பாதுகாவலர் விசாரணைக்காக மகளிர் காவல் நிலையத்தில் ஆஜர் Jun 09, 2021 அஇஅதிமுக அமைச்சர் அசார் சென்னை: முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் மணிகண்டன் உதவியாளர் மற்றும் பாதுகாவலர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர். விசாரணைக்காக நேற்று ஆஜராகாத இரண்டு பேரும் இன்று விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட நடிகை சாந்தினி தமக்கு பாலியல் தொல்லை கொடுத்து திருமணம் செய்வதாக கூறி ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் புகார் அளித்திருந்தார். நடிகை சாந்தினி அளித்த புகாரின் பெயரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் நடிகை சாந்தினி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நடிகை தாக்கல் செய்த மனு நீதி மன்றத்திற்கு வராததால் வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்திருந்தனர். மணிகண்டனின் முன்னாள் பாதுகாவலர் மற்றும் உதவியாளருக்கு விசாரணைக்காக ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனின் முன்னாள் பாதுகாவலர் மற்றும் உதவியாளர் இருவரும் சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார்.
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது: கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு அதிரடி நடவடிக்கை
மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை பார்த்திருக்கிறீர்களா? இப்படிப்பட்டவருக்கு மக்களின் பிரச்னை குறித்து எப்படித் தெரியும்: பிரியங்கா காந்தி
மே7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட மக்களுக்கு இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மரு.ரா.வைத்தியநாதன்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மறைவிற்கு செல்வப்பெருந்தகை இரங்கல்
குஜராத் உட்பட 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் 3ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: 2 மாஜி முதல்வர்கள், 2 ஒன்றிய அமைச்சர்கள் எதிர்காலம் என்னாகும்?
வலுக்கும் எதிர்ப்பு!: இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும் என எச்சரிக்கை..!!
முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என் மீது ஒரு ஊழல் புகார் கூட எழுந்ததில்லை: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
கர்நாடகத்தை உலுக்கும் ஆபாச வீடியோ வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை ஒன்றிய அரசு காப்பாற்றுவதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!!
காணாமல் போன நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!!
தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்