கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளுக்கு உணவு கொடுக்க ஒவ்வொரு மருத்துவமனையிலும் 10 பேர் நியமனம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளுக்கு உணவு கொடுக்க ஒவ்வொரு மருத்துவமனையிலும் 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று சென்னை வேளச்சேரியில் கோவிட் கேர் மையத்தில் ஆய்வு செய்த பின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். முழு ஊரடங்கால் 15 நாட்களில் தொற்று பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது. 9 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது என தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று விகிதாச்சாரத்தில் இறக்கம் வந்து கொண்டு இருக்கிறது. 

தமிழகத்தில் விரைவில் கொரோனா தோற்று முடிவுக்கு வரும் என கூறினார். கப்பட்டுள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். இதுதொடர்பாக 35,000 குப்பி கருப்பு பூஞ்சை தடுப்பு மருந்து கேட்டுள்ளோம், 3,060 குப்பிகள் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார். கருப்பு பூஞ்சை நோய்க்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறினார். கொரோனா தொற்று 15 நாளின் முழு ஊரடங்கால் சற்று குறைந்து வருகிறது. மக்கள் தேவையின்றி வெளியே சுற்றாமல் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார். 

Related Stories: