முக்கிய செய்தி சென்னை திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான சொர்ணம் அவர்களின் திடீர் மறைவு: தமிழக முதல்வர் இரங்கல் Jun 08, 2021 தமிழக சென்னை: திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான சொர்ணம் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முதல் பிள்ளையான முரசொலி உருவாக்கிய ஆற்றல்மிகு எழுத்தாளர்களில் ஒருவரான இவர் ஆரம்ப கால துணையாசிரியராக இருந்து “பிறை வானம்” என்ற தொடரை முரசொலியில் எழுதியவர். மாணவப் பருவத்திலேயே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கூர்மைப்படுத்தப்பட்ட சொர்ணம், சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் அடங்கிய “விடைகொடு தாயே” என்ற புரட்சிகர நாடகத்தின் மூலம் கழகத்தின் கொள்கைகளை பட்டிதொட்டிக்கெல்லாம் கொண்டு சென்றவர். கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் எழுச்சியை ஏற்படுத்திய இந்த நாடகம் கழக மாநாடுகளில் நடத்தப்பட்டது.எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் 17 படங்களுக்கு உரையாடல் தீட்டிய அவர், முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய “ஒரே ரத்தம்” எனும் திரைப்படம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். நான் நடத்திய “இளைய சூரியன்” வார ஏட்டின் பொறுப்பாசிரியராக பணியாற்றிய இவர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக் காட்சிக் கல்லூரித் தலைவர், தமிழ்நாடு திரைப்படப் பிரிவுத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றி- கலை இலக்கியப் பணிக்கு பெருமை சேர்த்தவர். முரசொலியில் ஞாயிறு தோறும் வெளிவந்த “புதையல்” இதழின் முழுப் பொறுப்பையும் ஏற்று - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எழுத்தோவியங்களை என்றும் பாதுகாக்க வேண்டிய கருத்துக் கருவூலமாக்கியவர். கலைஞர் விருது வழங்கி கெளரவப்படுத்தப்பட்டவர். எழுத்தாளர், இயக்குநர், வசனகர்த்தா, பத்திரிகையாளர் என்று பன்முகத் திறமையாளராகத் திகழ்ந்த திரு. சொர்ணம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது: கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு அதிரடி நடவடிக்கை
மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை பார்த்திருக்கிறீர்களா? இப்படிப்பட்டவருக்கு மக்களின் பிரச்னை குறித்து எப்படித் தெரியும்: பிரியங்கா காந்தி
மே7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட மக்களுக்கு இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மரு.ரா.வைத்தியநாதன்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மறைவிற்கு செல்வப்பெருந்தகை இரங்கல்
குஜராத் உட்பட 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் 3ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: 2 மாஜி முதல்வர்கள், 2 ஒன்றிய அமைச்சர்கள் எதிர்காலம் என்னாகும்?