கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்திட தமிழக அரசு முழு முயற்சி எடுத்திட வேண்டும்: பாஜ தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கை:  நதிநீர் இணைப்பு திட்டக்குழு கூட்டத்தின் முடிவில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்திடும் விரிவான திட்ட அறிக்கையை தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய தொடர்புடைய மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

தெலுங்கானா மாநிலம், இச்சம்பள்ளியிலிருந்து கல்லணை வரை 1165 கிலோமீட்டர் தூரத்திற்கு இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்படுகிறது. ஏறத்தாழ 86000 கோடி ரூபாயிலான இத்திட்டத்தினை நிறைவேற்றுகிற பொழுது தமிழகத்திற்கு ஆண்டுக்கு 100 டிஎம்சி வரை தண்ணீர் கிடைக்கும்.  இந்த வாய்ப்பை தமிழக அரசு பயன்படுத்தி தமிழகத்தின் நீர் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக எடுக்கவேண்டிய தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும். இதுபோன்ற திட்டங்களுக்கு வழக்கமாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை விட கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்திற்கு கூடுதலான நிதியை ஒதுக்கிட மத்திய அரசு முன்வந்தது மேலும் மகிழ்ச்சிக்குரியதாகும்.

Related Stories: