முக்கிய செய்தி சென்னை தமிழகத்தில் 11 மாவட்டங்களைத் தவிர்த்து கொரோனா பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் இன்று அமல் Jun 07, 2021 அமல் கொரோனா தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களைத் தவிர்த்து கொரோனா பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் இன்று அமலானது. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடந்த மாதம் 10-ம் தேதி முதல் 7-ம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கிறது. தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு, 14-ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று அதிகமாக உள்ளதால் சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.அனுமதி வழங்கப்பட்டவை: * சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீத டோக்கன்கள் மட்டும் கொடுத்து பத்திரப்பதிவு செய்ய அனுமதி.* மின் பணியாளர்கள், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரம் பழுது நீக்குபவர்கள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை இ-பதிவுடன் செயல்பட அனுமதி.* வாடகை வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோக்களில் பயணிகள் இ- பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். * டாக்சிகளில் 3 பயணிகள், ஆட்டோக்களில் 2 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.* ஹார்டுவேர், வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட அனுமதி.* இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள் இயக்க அனுமதி.* மின் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட அனுமதி* மின் பணியாளர்கள், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரம் பழுது நீக்குபவர்கள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை இ-பதிவுடன் செயல்பட அனுமதி.* சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீத டோக்கன்கள் மட்டும் கொடுத்து பத்திரப்பதிவு செய்ய அனுமதி.* மீன் சந்தைகள், இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.* காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி.* தனியாக செயல்படுகின்ற காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை திறக்க அனுமதி.* நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிக்கு அவசர காரணங்களுக்கு செல்ல அனுமதி* உணவுத் தேவையில் உள்ள முதியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு உணவு கொண்டு செல்லும் தன்னார்வலர்கள், இ-பதிவுடன் செல்லலாம்* மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் தனியொருவர் செல்ல வேண்டும் என்றால், மருத்துவ அவசர காரியங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு மட்டும் இ-பதிவுடன் செல்லலாம்* மாவட்டத்திற்கு உள்ளே மருத்துவ அவசர காரியங்கள், இறுதிச் சடங்குகளுக்கு இ-பதிவு இல்லாமல் செல்லலாம்.* விமானம், ரெயில் மூலம் வரும் பயணிகளை கண்காணிப்பதற்காக https://eregister.tnega.org மூலம் இ-பதிவு செய்து பயணிக்கும் முறை தொடர்ந்து அமலில் இருக்கும்.* ரத்த வங்கிகள் உள்ளிட்ட மருத்துவ சேவைகளுக்கு அனுமதி* அவசர பயணங்களுக்காக விசா வழங்கும் நிறுவனங்கள், குறைந்தபட்ச ஊழியர்களுடன் இயங்கலாம்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது; 94.56% பேர் தேர்ச்சி.! அரசு பள்ளிகளில் 91.32% மாணவர்கள் தேர்ச்சி
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 5 வயது சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்: வளர்ப்பு நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கைது
93 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை 3ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு: 1351 வேட்பாளர்கள் போட்டி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது: கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு அதிரடி நடவடிக்கை