பிட்சாவை டோர் டெலிவரி செய்யும்போது ரேஷன் பொருளை மட்டும் வீடுகளுக்கு தர முடியாதா? மோடிக்கு கெஜ்ரிவால் ஆவேச கேள்வி

புதுடெல்லி: ‘பிட்சாவை வீட்டுக்கே சென்று டெலிவரி செய்யும்போது, ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு நேரடியாக வழங்க முடியாதா?’ என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து நேற்று கெஜ்ரிவால் அளித்த பேட்டி:  நாடு முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் சூழலில், ரேஷன் பொருட்களை வீடுகளில் நேரடியாக வழங்க மத்திய அரசு முன் வர வேண்டும். டெல்லி அரசு இந்த  திட்டத்தை கடந்த ஆண்டே அமல்படுத்த முனைந்தது. ஆனால், மத்திய அரசின் தடையால் முடங்கியுள்ளது. ரேஷன் கடைகள் கொரோனாவைப் பரப்பும் இடங்களாக இருக்கின்றன. எனவே, டெல்லி அரசின் இந்த திட்டம் டெல்லிக்கு மட்டுமின்றி நாடு முழுவதற்கும் தேவை. பீட்சா, பர்கர், ஸ்மார்ட் போன்கள், ஆடைகள் போன்றவற்றை வீடுகளுக்கு சென்றே டெலிவரி செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் போது,  ரேஷன் பொருட்களை மட்டும் ஏன் வீடுகளுக்கே சென்று வழங்க முடியாது? டெல்லியில் உள்ள ரேஷன் மாபியாக்கள் இந்த திட்டத்தை செயல்பட விடாமல் தடுத்து வருகிறார்கள். அவர்களுடன் மத்திய அரசும் இணைந்து கொண்டால், டெல்லியில் உலுள்ள 72 லட்சம் ஏழை மக்களுக்கு யார் உதவுவார்கள்?’இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: