பங்கு சந்தையில் வர்த்தகம் செய்து கிடைத்ததை சுருட்டி கொண்டு 50 போலி நிறுவனங்கள் ஓட்டம் : எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை

புதுடெல்லி: பங்கு சந்தையில் போலி முகவரி கொடுத்து வர்த்தகம் செய்த 50 நிறுவனங்கள், கிடைத்த பணத்தை சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தன. இந்தியாவில் வங்கிகளில் கோடி கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்து விட்டு, விஜய் மல்லையா, நீரவ் மோடி உட்பட ஏராளமான பிரபல தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில்், கம்பெனி தொடங்கிய சில ஆண்டில் மும்பை பங்கு சந்தையில் கோடி கோடியாக பணத்தை திரட்டிக் கொண்டு 50 நிறுவனங்கள் ஓட்டம் பிடித்துள்ளன. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பங்கு சந்தையில் தற்போது 1,500க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகம் செய்யப்படுகின்றன. இந்த வர்த்தகம் செய்ய, நிறுவனங்கள் தகுந்த ஆவணங்களுடன் பதிவு செய்தபின் அனுமதிக்கப்படுகின்றன.

இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள 50 நிறுவனங்கள் போலி முகவரி கொடுத்துள்ளது அம்பலாகி உள்ளது. இது குறித்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய பங்கு சந்தை சார்பில் 50 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸ் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் அந்தந்த நிறுவனங்கள் பதிவு செய்த முகவரிக்கு தபால் மற்றும் இ மெயில் மூலம் அனுப்பப்பட்டது. ஆனால், அவர்களுக்கு இந்த நோட்டீஸ் சென்று சேரவில்லை. அவர்கள் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இதனால், 50 நிறுவனங்களை வர்த்தகம் செய்வதில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக தேசிய பங்கு சந்தை அறிவித்துள்ளது.

Related Stories: