அரசின் மதுபான நிறுவனம் கலைப்பு: தனியார் நடத்த ஜார்கண்ட் அரசு அனுமதி

ராஞ்சி: ஜார்கண்டில் செயல்பட்ட அரசின் மதுபான நிறுவனம் கலைக்கப்பட்டதால், தனியார் நிறுவனங்கள் மதுபானங்களை விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தமாக மதுபான விற்பனை செய்துவந்த  அரசின் ஜார்கண்ட் ஸ்டேட் பீவரேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஏகபோக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 2010ம் ஆண்டுக்கு முந்தைய நடைமுறையின்படி, தனியார் வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள் நேரடியாக மதுபானங்களை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய முடியும். இதுகுறித்து அமைச்சரவை செயலாளர் வந்தனா தாடெல் கூறுகையில், ‘ஜார்கண்ட் மதுபான சேமிப்பு மற்றும் மொத்த விற்பனை விதிகள்- 2021 என்ற சட்ட விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் மதுபான வகைகளை வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் மதிப்பு கூட்டப்பட்ட வரியிலிருந்து ஒரு வருடத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: