தமிழகத்தில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராஜ்நாத்சிங் பதில்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி டெல்லியில் கடந்த மாதம் 21ம் தேதி எம்பி டி.ஆர்.பாலு, பதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை அவரது அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை கொடுத்திருந்தார். அதில், ‘‘தமிழகத்தில் கடலோரப் பகுதியில் சமீபத்தில் காணாமல் போன மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர வேண்டும். நீண்ட நாட்களாகியும் அதற்கு தீர்வு காணாமம் இருக்கிறது. அதேபோன்று முக்கியமாக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 9 தமிழக மீனவர்கள் லட்சத்தீவு அருகில் படகு கோளாறினால் காணாமல் போனர்கள். அவர்களையும் மத்திய கடலோர காவல்படையினர் உதவியுடன் உடனடியாக மீட்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இக் கடித்தத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று பதில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி வைத்துள்ளார். அதில், ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழக கடலோரப் பகுதியில் சமீபத்தில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கடலோர காவல் படையினரின் தலைமை அதிகாரிகளுக்கு, தேவையான முயற்சிகளை எடுக்குமாறும் உத்தரவு பிறப்பிகப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: