சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் அளிப்பது பற்றி பரிந்துரைக்க 13 பேர் குழு: 10 நாளில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

புதுடெல்லி: கொரோனா 2வது அலையில் நாடு முழுவதும் பாதிப்பு ஏற்பட்டு வருவதால், பிரதமர் மோடி தலைமையில் கடந்த 1ம் தேதி நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில், மாணவர்களின் உடல்நலம், பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 12ம் வகுப்பு மாணவர்களை தேர்ச்சி செய்வதையும், அவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதையும் எப்படி முடிவு செய்யப் போகிறீர்கள்? என கேள்வி எழுப்பியது. அது பற்றிய விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தேர்ச்சி மற்றும் மதிப்பெண் வழங்குவது தொடர்பான பரிந்துரைகளை செய்வதற்காக 13 பேர் கொண்ட குழுவை சிபிஎஸ்இ நிர்வாகம் நேற்று அமைத்தது. பத்து நாட்களில் தனது அறிக்கையை தாக்கல் செய்யும்படி அதற்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதன் பரிந்துரை அடிப்படையில் மதிப்பெண், தேர்ச்சி அளிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: