கொரோனா தொற்று பாதிப்பு நீங்க கோவையில் கொரோனா தேவி சிலை

கோவை: கோவையில் கொரோனா பாதிப்பு நீங்க, ‘‘கொரோனா தேவி’’ சிலை அமைக்கப்பட்டுள்ளது. 48 நாட்கள் மகா யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில், கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல், படுவேகமாக உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. புதிதாக வரும் கொரோனா நோயாளிகளுக்கு இடம் இல்லாமல், ஆம்புலன்ஸ்சில் காத்துக்கிடக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று வேகம் குறைவதற்காக, கோவை இருகூர் பகுதியில் உள்ள காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் வளாகத்தில் ‘‘கொரோனா தேவி’ சிலை அமைக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது பற்றி காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறியதாவது: கொரோனா வைரஸ் என்னும் கிருமியால் மனித வாழ்க்கை முற்றிலும் சீர்குலைந்து விட்டது. அம்மை நோய், காலரா நோய் ஏற்பட்டபோது மக்கள் பல உயிர்களை இழந்தனர். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்ற வாக்கின்படி கிராமங்களிலே மாரியம்மன், மாகாளியம்மன், பிளேக் மாரியம்மன் என்ற வழிபாட்டினை ஏற்படுத்தினர். தற்போது கருங்கல்லில் ‘‘கொரோனா தேவி’ சிலை வடிவமைக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்து முடிக்கப்பட்டுள்ளது. அடுத்து, 48 நாள் மகா யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த யாகத்தில் பங்கேற்க, பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. இவ்வாறு அவர் கூறினார். …

The post கொரோனா தொற்று பாதிப்பு நீங்க கோவையில் கொரோனா தேவி சிலை appeared first on Dinakaran.

Related Stories: