வக்பு சட்டத்திருத்த மசோதா குறித்து கருத்தரங்கு; காதர் மொகிதீன் தலைமையில் நடந்தது


சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வக்பு சட்டத்திருத்த மசோதா-2024 ஆலோசனைகளும், ஆட்சேபனைகளும் என்ற கருத்தரங்கம், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை வகித்தார். உலமா பெருமக்கள், மஹல்லா ஜமாஅத் முத்தவல்லிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வரவேற்றார். கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும் தேசிய பொதுச்செயலாளருமான பி.கே.குஞ்ஞாலிக்குட்டி துவக்க உரையாற்றினார். ஒன்றிய சிறுபான்மை நலத்துறை முன்னாள் அமைச்சர் கே.ரஹ்மான்கான், ஆ.ராசா எம்பி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முஹம்மது பஷீர் எம்பி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் பி.ஏ.காஜா முயினுத்தீன், தேசிய துணைத் தலைவர் அப்துஸ் ஸமது ஸமதானி எம்பி, திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம். அப்துல்லா எம்பி, லாயர்ஸ் போரம் தேசிய தலைவர் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் எம்பி, மாநில முதன்மை துணைத்தலைவர் எம்.அப்துல் ரஹ்மான், மாநில துணைத் தலைவர் கே.நவாஸ்கனி எம்பி, தேசிய செயலாளர் எச்.அப்துல் பாசித், மகளிர் லீக் தேசிய தலைவர் எஸ்.பாத்திமா முஸப்பர் எம்.சி. ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான் நன்றி கூறினார்.

The post வக்பு சட்டத்திருத்த மசோதா குறித்து கருத்தரங்கு; காதர் மொகிதீன் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: