போளூர் அருகே மணல் கடத்தலை தடுக்க ஆற்றில் ராட்சத பள்ளம்-வருவாய்த்துறையினர் நடவடிக்கை

போளூர் : போளூர் அருகே மணல் கடத்தலை தடுக்க ஆற்றின் கரையோரம் வருவாய்த்துறையினர் ராட்சத பள்ளம் வெட்டினர்.போளூர் அடுத்த சனிக்கவாடி செய்யாற்றில் மணல் கடத்தல் தீவிரமாக நடந்து வருகிறது. போலீசார் ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் ஆற்றுப்பகுதியில் ரோந்து செல்வது கடினமாக உள்ளது.

வருவாய்த்துறையினரும் கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு மணல் கடத்தல் ஜரூராக நடந்து வருகிறது.இந்நிலையில், மணல் கடத்தலை தடுக்க தாசில்தார் மு.சாப்ஜான் உத்தரவின்பேரில் சனிக்கவாடி மற்றும் வம்பலூர் செய்யாற்றங்கரையில் ராட்சத பள்ளம் வெட்டப்பட்டு மணல் கடத்தும் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடை ஏற்படுத்தியுள்ளனர்.

Related Stories: