குழந்தை திருமணங்களை நடத்தினால் கடும் நடவடிக்கை: சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை

சென்னை:  குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்து  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை  அமைச்சர் பி.கீதாஜீவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் காணொலி  வாயிலாக  தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சமூக நலம் மற்றும்  சத்துணவுத்திட்டத் துறையின் முதன்மை செயலாளர் சம்பு கல்லோலிகர், சமூகநல  ஆணையர் ஆபிரகாம், சமூகப்பாதுகாப்புத் துறை ஆணையர் வே.லாவ்வேனா,  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநர் கவிதா ராமு மற்றும்  துறையின் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அனைத்து மாவட்ட சமூக நல அதிகாரிகள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் சைல்டு லைன் அலுவலர்கள் உடன் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனை மேற்கொண்டார்.

 

கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும், அது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், குழந்தை திருமணத்தை தடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை ஆகியவற்றுடன் இணைந்து சமூக பாதுகாப்புத்துறை மற்றும் சமூகநலத்துறை  நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும், குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள், அதனை ஊக்குவிப்பவர்கள் மற்றும் இத்தகைய குழந்தை திருமணத்தில் கலந்துகொள்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: