வெளி ஆட்கள் உள்ளே வராத வகையில் ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சி பகுதிகளுக்கு சீல் : ஆட்சியர் அதிரடி உத்தரவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வெளி ஆட்கள் உள்ளே வராத வகையில் 225 கிராம ஊராட்சி பகுதிகளை சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார். ஊராட்சி பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்காத நிலையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை நேற்றும் புதிதாக 1,743 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 144 ஆக உயர்ந்தது. இதில் 38 ஆயிரத்து 426 பேர் குணமடைந்து உள்ளார்கள். நேற்று மட்டும் 1,301 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டார்கள். சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

தற்போது 14 ஆயிரத்து 400 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்காரணமாக மாநில அளவில் சற்று தொற்று பரவல் குறைய தொடங்கி இருக்கிறது. அதேசமயம் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.

Related Stories: