இறால் புளி குழம்பு

செய்முறை

Advertising
Advertising

கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு இதனுடன் இஞ்சி பூண்டு விழுதினை சேர்க்க வேண்டும். அடுத்து தக்காளி சேர்த்து நன்கு வதங்கியதும், அதில் மிளகுத் தூள், குழம்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், சோம்புத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கியதும், சுத்தம் செய்த இறால், தேங்காய் விழுது மற்றும் புளித்தண்ணீர் சேர்க்கவும். இறால் வெந்தவுடன் மல்லித்தழையைச் சேர்த்து அலங்கரிக்கவும்.