மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு முறையாக இல்லை; ஜிஎஸ்டி வரி முறையில் மாற்றம் தேவை: நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் பேட்டி

சென்னை: நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; மதுரை புறநகரில் கொரோனா பரவல் சற்று அதிகமாக உள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். சென்னை, திருவள்ளூர், போல் மதுரை நகரில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் குறித்து பிற மாநில அமைச்சர்கள் எனக்கு அறிவுறுத்தல்கள் அளித்துள்ளனர். ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு என்ற நடைமுறை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.

ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு என நிர்ணயித்துள்ளது தவறு. ஜிஎஸ்டி கூட்டத்தில் மாநிலங்கள் உரிமையை பாதுகாப்பது குறித்து பேசினேன். மக்கள் தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வாக்குகள் அளிக்கப்பட வேண்டும். மாநில அரசுகளிடம் வரிப் பணத்தை பெற்று அதையே மத்திய அரசு திரும்பத் தருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சொந்த ஆதாரத்தில் தான் செலவு செய்யப்படுகிறது. வருவாய், பொருளாதாரம், மக்கள் தொகை, உற்பத்தி மதிப்பு, நுகர்வு மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வாக்கு இருக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை சொந்த நிதி ஆதாரத்தில்தான் செலவுகள் மேற்கொள்ளப்படுகிறது.

பெரிய மாநிலங்களில் இருந்து ஈட்டப்படும் வருவாய் சிறிய மாநிலங்களுக்கு அளிக்கப்படுகிறது.  மாநிலங்களிடம் இருந்து பெற்று மத்திய அரசு தரும் நிதி தமிழகத்திற்கு 30% அளவுக்கே உள்ளது. ஜி.எஸ்.டி. வரி முறை அடிப்படை ஆதாரம் இல்லாமல் ஆட்டம் கண்டுதான் உள்ளது. அது முழு ஆய்வு இல்லாமல் கொண்டுவரப்பட்டது. ஜி.எஸ்.டி. வரி முறையில் மாற்றம் கொண்டுவந்தால்தான் அது நீடிக்க முடியும் எனவும் கூறினார்.

Related Stories: