மன்னார்குடி தொகுதியில் ஒரே நாளில் 2,691 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை: முகாம்களை அதிகரித்து எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா அசத்தல்

சென்னை: தமிழகத்தில் மன்னார்குடி தொகுதியில் ஒரே நாளில் 2,691 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. முகாம்களை அதிகரித்து எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா அசத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில் சிறுவர் முதல் ெபரியவர்கள் வரை அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து ஆர்வமில்லாமல் இருந்தவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள முன்வந்தனர். மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழகத்தில் 3,23,915 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர். கடந்த 5 நாட்களில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுள்ளனர். தொகுதியாக வாரியாக தடுப்பூசி ஒதுக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி தொகுதி புதிய சாதனை படைத்தது. அதாவது ஒரே நாளில் 2,691 பேருக்கு கொரோனா தடுப்பூசி ேபாடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தொகுதி வாரியாக போடப்பட தொடங்கியதில் இருந்தே சராசரி தடுப்பூசி விநியோகம் 1062 தான். ஆனால் நேற்று முன்தினம் மன்னார்குடி தவிர மற்ற தொகுதிகளில் எல்லாம் சராசரியாக 1062 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது.

ஆனால் மன்னார்குடியில் மற்ற தொகுதிகளின் சராசரியை தாண்டி 2,691 பேருக்கு தடுப்பூசி ஒரே நாளில் போடப்பட்டு புதிய ரெக்கார்டு படைக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் மொத்தமாக போடப்பட்ட தடுப்பூசிகளில் கிட்டத்தட்ட 1.08% தடுப்பூசி மன்னார்குடியில் இருந்து போடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களை விட சுமார் 250% கூடுதலாக மன்னார்குடியில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி “மின்னும் மன்னை”  என்ற திட்டத்தின் கீழ் மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மன்னார்குடியில் தினமும் பல்வேறு ஏரியாக்களில் முகாம்கள் போடப்பட்டு 200-300 பேருக்கு வேக்சின் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும்,  18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 200 பேருக்கும், 45 வயது கொண்டவர்கள் 100 பேருக்கும் என்று தினமும் பல கிராமங்களில் போடப்படுகிறது.

Related Stories: