விருதுநகர் மாவட்டத்தில் ஆக்சிஜன், படுக்கை வசதி போதுமான அளவு உள்ளது-அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் ராஜபாளையம் கிருஷ்ணாபுரம், செங்குன்றாபுரம் பகுதிகளில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு செய்தனர்.

அதை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன்கூறுகையில், ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் அவரவர் தொகுதி பிரச்னைகளை தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கைளை நிறைவேற்றப்படும். மாவட்டத்தில் 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கோவிட் கேர் சென்டர் அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கனவே 401 ஆக்சிஜன் படுக்கைகளில் 72 காலியாக உள்ளது. பெரிய அளவில் அச்சம் இல்லை. ஆக்சிஜன் வசதியில்லாத 4593 படுக்கைகளில் 1,306 படுக்கைகள் பயன்பாட்டிலும், 3,737 காலியாக உள்ளது. தீவிர சிகிச்சை படுக்கைகள் 14 காலியாக இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் பதட்டமற்ற நிலவுகிறது. ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் போதுமானதாக உள்ளது.

மாவட்டத்திற்கு 60 செறிவூட்டி தேவையென்ற கலெக்டரின் கோரிக்கையை ஏற்று 60 செறிவூட்டிகள் உடனே அனுப்பப்படும். மேலும் நெடுஞ்சாலையில் விபத்து மற்றும் பட்டாசு ஆலை விபத்து தீ சிகிச்சைக்கு என ட்ரோமா கேர் சென்டர் மருத்துவக்கல்லூரி வளகத்தில் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, டிஐபி திட்டத்தில் விரைவில் ட்ரோமா கேர் சென்டர் அமைக்கப்படும் என்றார்.

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் 28 பேர் கொரோனாவால் பாதிகக்ப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று அந்த பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தனர்.

தென்காசி எம்பி தனுஷ் எம்.குமார், ராஜபாளையம் எம்எல்ஏ தங்கபாண்டியன், ராஜபாளையம் யூனியன் சேர்மன் சிங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள மக்களிடம், தேவையான உதவிகள் தடையின்றி கிடைக்கின்றதா அமைச்சர் சுப்பிரமணியம் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து ராஜபாளையம் பிஏசிஆர் அரசு பொது மருத்துவமனையினை ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories: