கொரோனா நோயாளிகள் குறித்த அறிக்கையை இணைந்து கண்காணிக்க 15 அதிகாரிகள் நியமனம்:தகவல்களை தர மறுத்தால் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எத்தனை பேர் என்று நாள் தோறும் அறிக்கை அனுப்ப வேண்டும். தகவல்களை தர மறுக்கும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து வெளியிட்ட அரசாணை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெற வரும் நபர்களில் கோவிட் தொற்று அறிகுறி உள்ள நபர்கள் அல்லது கோவிட் தொற்று உள்ளவராக சந்தேகிக்கப்படும் நபர்கள் குறித்த தகவல்களை நாள்தோறும் கீழ்க்காணும் அட்டவணையின்படி gccpvthospitalreports@chennaicorporation.gov.in எஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இது தொடர்பாக தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்களுடன் ஒருங்கிணைந்து தகவல்களை பெற மாநகராட்சியின் சார்பில்  15 மண்டலங்களுக்கு ஒரு அதிகாரி என 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர், செல்போன் எண்ணை மேற்கண்ட  மின்னஞ்சல் முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இந்த குழுவின் நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது. மேலும் நாள்தோறும் தகவலை அளிக்க மறுத்தாலோ அல்லது தவறான தகவலை அளித்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: