இங்கிலாந்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

லண்டன்: கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு பல்வேறு வயதினருக்கு பல கட்டங்களாக தடுப்பூசி போடப்படுகிறது. நாடு முழுவதும் இதுவரை 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அங்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5ல் 4 பேர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் தடுப்பூசி போடுவதற்கான வயதைக் குறைக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி இங்கிலாந்தில் வரும் நாட்களில் 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கப்படும் என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: