சிறையில் இருந்தே தேர்தலில் வென்ற எம்எல்ஏ கோகாய்க்கு மனநலம் சரியில்லை: அசாம் முதல்வர் கருத்தால் சர்ச்சை

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் புதிதாக தொடங்கப்பட்ட ராய்ஜோர் தள் கட்சியின் தலைவர் அகில் கோகாய் சிப்சாகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் குடியுரிமை திருத்தசட்டத்துக்கு எதிரான போராடியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த வெள்ளியன்று நடந்த பதவியேற்பு விழாவில், என்ஐஏ அனுமதியுடன் சிறையிலிருந்து வந்து சட்டசபையில் அகில் கோகாய் எம்எல்ஏவாக பதவியேற்றார். அவர் இந்த கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்பது குறித்து அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று சட்டப்பேரவையில் பேசுகையில், “ உடல்நிலை பாதிக்கப்பட்டவரை எப்படி கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க முடியும். அவர் கடந்த 4 மாதங்களாக உளவியல் பிரச்னை, மனநல பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு கவுகாத்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்றார். முதல்வரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: