சென்னை தனியார் ஆய்வு கூடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு கட்டணத்தை நிர்ணயம் செய்தது தமிழக அரசு May 20, 2021 தமிழ்நாடு அரசு சென்னை தின மலர் சென்னை: கொரோனா பரிசோதனை செய்வதற்கு கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்தது. தனியார் ஆய்வு கூடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மருத்துவ காப்பீடு பயனாளிகளுக்கு 550 ரூபாயாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மருத்துவ காப்பீடு இல்லாத பயனாளிகளுக்கு 900 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வீட்டிற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்ய கூடுதலாக 300 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்து மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்வதற்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்தது. எனவே தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. … The post தனியார் ஆய்வு கூடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு கட்டணத்தை நிர்ணயம் செய்தது தமிழக அரசு appeared first on Dinakaran.
திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ வங்கியில் கொள்ளை முயற்சி: தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் மர்ம நபருக்கு வலை லாக்கரை உடைக்க முடியாததால் பல கோடி பணம், நகை தப்பியது
வடகிழக்கு பருவ மழையையொட்டி மீட்பு பணிக்கு சென்னை மாநகராட்சியில் 103 படகுகள், 426 மோட்டாருடன் டிராக்டர்கள் தயார்: 22 ஆயிரம் பணியாளர்களுடன் பணிபுரிய 18,500 தன்னார்வலர்களும் பெயர் பதிவு
பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நோட்டீஸ்: முதற்கட்டமாக 170 வீடுகள் மாற்று இடத்திற்கு இடம் பெயர்கிறது
கோடம்பாக்கம் பகுதியில் 3 நாளில் திருமணம் நடக்க இருந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை
கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் மதரீதியான நிகழ்ச்சியில் பங்கேற்க கோரி மாணவிகளுக்கு பேராசிரியை மிரட்டல்: ஆடியோ வைரல்
விஐடியின் 40வது ஆண்டு மாணிக்க விழா கல்வி, சுகாதாரம், வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: முன்னாள் குடியரசு துணைத்தலைவர் பேச்சு
தனியார் கல்லூரிகளின் அருகில் ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை கரைகளை அகலப்படுத்தும் பணி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு