நந்தன் கால்வாய் திட்ட பணிகளை புகழேந்தி எம்எல்ஏ திடீர் ஆய்வு

விழுப்புரம் :  திருவண்ணாமலை மாவட்டம் கீரனூர் அணைக்கட்டு கிராமம் அருகே உள்ள குறிஞ்சி ஆறு மற்றும் ஓலை ஆற்றில் இருந்து இடதுபுறமாக பிரிந்து செல்வது நந்தன் கால்வாய். இக்கால்வாய் சுமார் 37.8 கிலோ மீட்டர் நீளம் உடையது. இக்கால்வாய் கீரனூர் கிராமத்திலிருந்து விழுப்புரம் அருகே உள்ள பணமலைபேட்டை ஏரியில் முடிகிறது. இக்கால்வாயை நம்பி சுமார் 500 ஏக்கர் அளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இக்கால்வாய் தூர்வாரப்படாமல் இருந்ததால் கடந்த ஆண்டு பெய்த மழையினால் நீர்வரத்து இல்லாமல் போனது.

தற்போது அரசு நந்தன் கால்வாயை சீரமைக்க 27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. கடந்த ஏப்ரல் மாதம் பணி துவங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று விக்கிரவாண்டி புகழேந்தி எம்.எல்.ஏ நந்தன் கால்வாய் திட்ட பணிகள் குறித்து பனமலைப்பேட்டையில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகள் நடைபெறும் விவரம் குறித்து கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் அப்பகுதி விவசாயிகளிடம் விரைவில் நந்தன் கால்வாய் திட்டம் முடிவு பெறும் என வாக்குறுதி அளித்தார். அப்போது துணை பொறியாளர் கனகராஜ், தினேஷ் மற்றும் காணை வடக்கு தி.மு.க ஒன்றிய செயலாளர் முருகன் மற்றும் கிழக்கு தி.மு.க ஒன்றிய செயலாளர் கல்பட்டு ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: