காய்கறிகள் விலை ஏற்றம்: வணிகர்கள் சங்க பேரமைப்பு கண்டனம்

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: காய்கறி, பழம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தடையின்றி ஊரடங்கு நாட்களிலும் கிடைத்திட, நேரடி விநியோகம் செய்திட சென்னையை பொருத்தவரை கோயம்பேடு வணிக வளாகம் முழுமையாக இயங்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. காய்கறி, பழங்களை வாகனங்களில் நேரடியாக கொண்டு சென்று, அந்தந்த பகுதிகளிலேயே விநியோகம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒரு சிலர் செயற்கையாக விலைவாசி ஏற்றத்தை உருவாக்கி வருவதாக வரும் தகவல்களை அடுத்து, அதுபோன்றவர்களை வன்மையாக எதிர்ப்பதோடு, மக்களுக்கு துரோகம் செய்யும் அதுபோன்ற நபர்களை வணிகம் செய்யும் நிலையில் இருந்து கட்டாயம் நீக்கிவிடக்கூடிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

Related Stories: