முக்கிய செய்தி சென்னை காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக அரசு எச்சரிக்கை May 23, 2021 TN அரசாங்கம் சென்னை: நாளை முதல் முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்படுவதால் காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. காய்கறிகளை செயற்கையாக கூடுதல் விலைக்கு விற்பது மக்களை சுரண்டும் செயல் எனவும் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழக அரசு உயர்த்தப்பட்ட காய்கறி விலைகளை உடனடியாக குறைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. நாளை முதல் ஒருவாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. நாளை முதல் ஒருவாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதால் இன்று இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது: கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு அதிரடி நடவடிக்கை
மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை பார்த்திருக்கிறீர்களா? இப்படிப்பட்டவருக்கு மக்களின் பிரச்னை குறித்து எப்படித் தெரியும்: பிரியங்கா காந்தி
மே7 முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட மக்களுக்கு இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா கைது
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மரு.ரா.வைத்தியநாதன்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மறைவிற்கு செல்வப்பெருந்தகை இரங்கல்
குஜராத் உட்பட 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் 3ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: 2 மாஜி முதல்வர்கள், 2 ஒன்றிய அமைச்சர்கள் எதிர்காலம் என்னாகும்?
வலுக்கும் எதிர்ப்பு!: இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும் என எச்சரிக்கை..!!
முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என் மீது ஒரு ஊழல் புகார் கூட எழுந்ததில்லை: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு