உலகம் அமெரிக்காவை தொடர்ந்து 3 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதாக ஃபிரான்ஸ் அறிவிப்பு..!! May 22, 2021 பிரான்ஸ் எங்களுக்கு பாரிஸ்: அமெரிக்காவை அடுத்து பிரான்சும் தேவைக்கு அதிகமாக இருக்கும் தடுப்பூசிகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்து தங்களிடம் மிகுதியாக உள்ள 9 கோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதாக அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதற்கான விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறியிருந்தார்.இந்நிலையில், இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இந்த ஆண்டு இறுதிக்குள் 3 கோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்ததாவது, உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் அமைப்புடன் இணைந்து பணியாற்ற பிரான்ஸ் தயாராக இருக்கிறது. தடுப்பூசி விநியோகத்தில் ஆப்பிரிக்காவுக்கு முன்னுரிமை அளிக்க நாங்கள் திட்டமிட்டு வருகின்றோம். இந்த ஆண்டின் இறுதிக்குள் பிரான்ஸ் தன்னிடம் தேவைக்கு அதிகமாக உள்ள சுமார் 3 கோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளும் என தெரிவித்து கொள்கின்றேன் என குறிப்பிட்டார். கொரோனா பரவலை தடுத்து நிறுத்தும் நோக்கில் வளர்ந்த நாடுகள் பலவும், கொரோனா தடுப்பூசிகளை வாங்கி குவித்து வருகின்றன. இதனால் ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து WHO கோவாக்ஸ் அமைப்பு, வல்லரசு நாடுகளிடம் உபரியாக இருக்கும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து ஏழை நாடுகளுக்கு விநியோகம் செய்து வருகிறது.
புதிய தடுப்பூசிகள் அதிகம் வந்துள்ளதால் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை திரும்பப் பெற்ற நிறுவனம்: பக்கவிளைவு விவகாரத்திற்கு மத்தியில் திடீர் முடிவு
உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள தங்களது கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவிப்பு
குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சி விவகாரம்; இந்தியாவின் விசாரணை முடிவுக்காக காத்திருக்கிறோம்: அமெரிக்கா தகவல்
போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு மறுப்பு; ரஃபா எல்லையில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் படையினர் 20 பேர் பலி
5வது முறையாக ரஷ்ய அதிபராக புடின் பதவியேற்பு: அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை தொடங்கினார்!!
காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம்!!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸின் 3வது விண்வெளி பயணம் ரத்து.. கடைசி நேரத்தில் நடந்தது என்ன ?