ரெம்டெசிவிர் வாங்கி வரச்சொல்லி கட்டாயப்படுத்தினால் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி..!

சேலம்: சேலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: சேலத்தில் ஆக்சிஜன் பயன்பாட்டை தவறாக கையாண்டதால், 2 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் அரசிடம் நேரடியாக ரெம்டெசிவிர் மருந்துகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாறாக நோயாளிகளை வாங்கி வர கட்டாயப்படுத்தினால், உச்சபட்ச நடவடிக்கை எடுக்கப்படும். 98 சதவீத தனியார் மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், ஒருசில மருத்துவமனைகளால் தவறுகள் நடக்கிறது.

அனைவருக்கும் சமமான, தரமான சிகிச்சை கிடைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தால், 210 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அங்கு மேலும் 2 அலகுகளில் தலா 210 மெகாவாட் என மொத்தம் 420 மெகாவாட் மின்உற்பத்தி தடையின்றி நடந்து வருகிறது. இதேபோல், தூத்துக்குடியிலும் மின் உற்பத்தி சீராக இருந்து வருகிறது. இதனால், தமிழகத்தில் எங்கும் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: