முக்கிய செய்தி சென்னை சிதற தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி; முக்கிய பொறுப்பாளர்கள் கட்சியில் இருந்த விலகல்: கலக்கத்தில் கமல்ஹாசன் May 19, 2021 கமல்ஹாசன் சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் முருகானந்தம் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளார். கமல்ஹாசனின் சர்வாதிகார போக்கினால் தேர்தலில் தோல்வியடைந்ததாக முருகானந்தம் குற்றம் சாட்டினார். கூட்டணிக் கட்சிகளுக்கு 100 தொகுதிகளை ஒதக்கியதே தோல்விக்கு காரணம் என முருகானந்தம் திருச்சியில் பேட்டியளித்தார். அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட தமது கட்சியில் ஆள் இல்லை என கமல் கூறியது உறுத்தலாக உள்ளது என தெரிவித்தார். முருகானந்தத்துடன் திருச்சி மாவட்ட மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் 2,200 பேர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யத்தின் மதுரவாயல் தொகுதியில் போட்யிட்ட பத்மப்ரியா கட்சியில் இருந்து விலகினார். அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றி என தனது ட்வீட்டரில் பதிவிட்டார். சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன் என குறிப்பிட்டார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் கடந்த மே 6-ம் அக்கட்சியில் இருந்து விலகினார். மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் தங்கள் வகித்த பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். துணை தலைவர் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு, சிகே. குமரவேல் மவுரியா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி: இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது: மே 28 வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என கணிப்பு
நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் கல்லூரி மாணவர் கைது: வழக்கில் புதிய திருப்பம்
அக்னி நட்சத்திரம் நாளை துவங்க உள்ள நிலையில் 17 இடங்களில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது: கரூர் 112, ஈரோடு 111, வேலூரில் 110 டிகிரி பதிவு; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை ஆய்வு மையம் அறிக்கை
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மலைக்க வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு
ஆபாச வீடியோ பிரச்னை விஸ்வரூபம் எடுப்பதால் ஆந்திராவில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, அமித்ஷா மறுப்பு?: சந்திரபாபு, பவன்கல்யாண் `அப்செட்’
மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின்கீழ் 12 மாவட்டங்களில் ₹306 கோடி வசூலிப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தயார்; தேர்வு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் பள்ளிக்கல்வித்துறை அனுமதி கேட்பு..!!
போதைப்பொருள் வழக்கில் கைதான ராகுலுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பா?.. முக்கிய ஆவணங்கள் சிக்கின..போலீஸ் தீவிர விசாரணை..!!
திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல் ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு பணி தொடர்பாக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என பாகிஸ்தான் விரும்புவதாக பிரதமர் மோடி உரை : வாக்கு ஜிஹாத் குறித்தும் சாடல்!
மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப் ஃபேக்’ வீடியோக்கள்: தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வெடிமருந்துகளை அருகருகே வைத்து கிடங்கில் இறக்கியதே கல்குவாரி விபத்துக்கு காரணம் :எஃப்.ஐ.ஆரில் பரபரப்பு தகவல்
சென்னையில் வாட்ஸ் ஆப் குழு மூலம் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் உட்பட 2 பேர் கைது..!!
தமிழகத்தில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? :பாலச்சந்திரன் சொல்வது என்ன ?
இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகார் : பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் குற்றவாளியாக எஸ்ஐடி பிரகடனம்!!