புதிதாக 33,059 பேருக்கு தொற்று ஒரே நாளில் 21,362 பேர் குணமடைந்தனர்: 364 பேர் பலி: சென்னையில் படிப்படியாக குறைகிறது

சென்னை: கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை உட்பட தொற்று பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அரசு கட்டுப்பாடுகளை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றுவோர் மீது வழக்கு பதிந்து அவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். சென்னையில் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 6 நாட்களாகவே கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வருகிறது. குறிப்பாக,  கடந்த 12ம் தேதி 7,564 ஆயிரத்திற்கும் மேல் சென்ற பாதிப்பு எண்ணிக்கை 13ம் தேதி முதல் 7  ஆயிரத்திற்கும் கீழ் குறைய துவங்கியது. அதன்படி நேற்று முன்தினம் 6,150 ஆக இருந்த பரவல் நேற்று சென்னையில் 6,016 ஆக குறைந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:  தமிழகத்தில் நேற்று 1,60,463 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 33,059 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரையில் 16,64,350 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 2,42,929 பேர் சிகிச்சை பெற்று  வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 21,362 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.  அதன்படி, தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 14,03,052 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 364 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 192 பேரும், தனியார் மருத்துவமனைகளில்  172 பேரும் நேற்று உயிரிழந்தனர்.

Related Stories:

>