நடமாடும் வாகனத்தில் தடுப்பூசி முகாம்: ஆதம்பாக்கத்தில் சிறப்பு ஏற்பாடு

ஆலந்துார்: கொரோனா 2- வது  அலையில் சென்னை ஆலந்தூர் 12-வது  மண்டலத்தில் மட்டும் நோய்த்தொற்றால் இதுவரை  2 ஆயிரத்து 433 பேர்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய்த்தொற்றின் தாக்கத்தைக் குறைக்கும் விதமாக  தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஆலந்தூர் மண்டலம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் நலச்சங்கங்கள் உதவியுடன் தடுப்பூசி போடும் பணி  ஆதம்பாக்கம் நியூ காலனி பகுதியில் தொடங்கப்பட்டது. இதில்,  ஏராளமான பொதுமக்கள் தாமே முன்வந்து தடுப்பு ஊசி போட்டுக் கொண்டனர்.

இதுகுறித்து ஆலந்தூர் 12-வது மண்டல மாநகராட்சி உதவி கமிஷனர் சீனிவாசன் கூறுகையில், ஆலந்தூர் மண்டலத்தில் கொரோனா 2-வது அலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் தாக்கத்தைக் குறைக்கும் விதமாக ஒரு சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளளோம். அதாவது, வீடுவீடாக சென்று பொதுமக்கள்  பயன்பெறும் விதமாக  நடமாடும் வாகனம் மூலம் தடுப்பு ஊசி போடும் பணி ஆதம்பாக்கத்தில் தொடங் கப்பட்டுள்ளது. முன்களபணியாளர்கள் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

Related Stories: