சீனாவில் இருந்து கிரையோஜெனிக் ஆக்சிஜன் கண்டெய்னர்கள் இறக்குமதி!: இம்மாத இறுதிக்குள் தமிழகம் வந்தடையும்..அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி..!!

சென்னை: தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜனை எளிதில் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்காக  சீனாவில் இருந்து கிரையோஜெனிக் ஆக்சிஜன் கண்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சன் செய்திகளுக்கு பிரத்யோக பேட்டி அளித்த அவர், சீனாவில் 20 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 12 கிரையோஜெனிக் கண்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். இம்மாத இறுதிக்குள் அவை தமிழகம் வந்தடையும் எனவும் கூறினார். 

மேலும் இந்த கிரையோஜெனிக் கண்டெய்னர்களின் நேரடி இறக்குமதி தமிழகத்திற்கு மிகப்பெரிய மைல் கல்லாக இருக்கும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேட்டியில் குறிப்பிட்டதாவது, திரவ பிராண வாயுவை கொண்டு வருவதற்காக கண்டெய்னர்கள் மிக முக்கிய தேவையாக உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டபடி உறைநிலையில் இருக்கக்கூடிய கிரையோஜெனிக் கண்டெய்னர்கள் தேவையாக இருக்கிறது. 

அதற்காக சீனாவில் இருந்து 12 கொள்கலன்களை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆக்சிஜனை எளிதில் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையாக இந்த கண்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளது என்று தெரிவித்தார். 

Related Stories:

>