எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவு; முதல்வர் இரங்கல்; அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்த முதல்வர் உத்தரவு

சென்னை: எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழின் ஆகச் சிறந்த கதை சொல்லியான கி.ராஜநாராயணனை இழந்து நிற்கிறோம் என குறிப்பிட்டார். கரிசல் குயில் கி.ரா.மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள் என கூறினார். கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும் என தெரிவித்தார். எழுத்தாளர் கி.ரா.வை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரக்கும், வாசகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். எழுத்தாளர் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் (99) வயது முதிர்வு மற்றும்  உடல்நிலை பாதிப்பால் நேற்று இரவு 11 மணிக்கு காலமானார். லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அஞ்சலிக்கு வைக்கப்படும் அவரது உடல் இன்று  மாலை கருவடிக்குப்பம் சுடுகாட்டிற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்யப்படுகிறது. 

Related Stories:

>