ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா 2வது அலைக்கு இதுவரை 244 டாக்டர்கள் உயிரிழப்பு!: இந்திய மெடிக்கல் அசோசியேஷன் தகவல்..!!

சென்னை: கொரோனா 2-வது அலைக்கு இதுவரை 244 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மெடிக்கல் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் 2ம் அலை இந்தியாவில் சூறாவளியாக அடித்து கொண்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும் கொரோனா தாக்கம் உயர்ந்துகொண்டே செல்கிறது. தற்போதைய நிலையில் தினந்தோறும் 4 ஆயிரம் பேர் உயிரிழக்கும் அபாய கட்டத்தில் இந்தியா உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. 

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததன் தொடக்கத்தில் இருந்தே அதனை விரட்டி அடிக்கும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கொரோனா கொல்லுயிரிக்கு இலக்காகி மருத்துவர்களும் உயிர்களை இழக்கும் துர்த்தாஷ்டவசமான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா 2-வது அலைக்கு இதுவரை 244  டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மெடிக்கல் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. 

இதில் நேற்று மட்டும் 50 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பீகாரில் அதிகபட்சமாக 69 மருத்துவர்களும், உத்திரப்பிரதேசத்தில் 34 மருத்துவர்களும், டெல்லியில் 27 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர். கடந்த வருடம் இந்தியாவில் கொரோனா தொற்று தாக்கிய போது 736 மருத்துவர்கள் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றுக்கு சுமார் 1000 டாக்டர்கள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: