தமிழகத்தில் கீழமை நீதிமன்ற பணிகள் மறுஉத்தரவு வரும் வரை நிறுத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்ற பணிகளும் மறு உத்தரவு வரும் வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ரிமாண்ட் நடவடிக்கைகளை தவிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் அனைத்துவிதமான நீதிமன்ற பணிகளும் மறுஉத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழமை நீதிமன்ற வளாகங்களில் வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் முன் அனுமதியின்றி நுழைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியமின்றி நீதிமன்ற ஊழியர்களும் நீதிமன்றம் வரவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேகமாக பரவும் கொரோனாவுக்கு நீதிபதிகள் வழக்கறிஞர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நெல்லை தலைமை குற்றவியல் நீதிபதியான நிதிஷ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதனை தொடர்ந்து கீழமை நீதிமன்ற பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Related Stories: