225 கார் சிறப்பு ஆம்புலன்ஸ்கள் மூலம் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் 1,251 பேர் மருத்துவமனை, முகாம்களில் சேர்ப்பு

சென்னை:  சென்னை மாநகராட்சியில் 225 கார் சிறப்பு ஆம்புலன்ஸ்கள் மூலம் 1,251  கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனை மற்றும் முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்று மாநகராட்சி அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.  சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட ககன்தீப் சிங் பேடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதன்படி சென்னை மாநகராட்சி சார்பில் 250 ஆம்புலன்ஸ் வாகனங்களை நியூ பாண்டியன் கால்டாக்சி  நிறுவனத்துடன் இணைந்து அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய திட்டத்தை நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து துவக்கி வைத்தார்.  இந்நிலையில் இந்த  சிறப்பு கார் ஆம்புலன்ஸ்கள் கடந்த 15,16ம் தேதிகளில் 15  மண்டலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு கார் ஆம்புலன்ஸ் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி 15ம் தேதி 225 வாகனங்கள் ஒதுக்கப்பட்டதில் 607 நோயாளிகள் கொரோனா அறிகுறி இருப்பதாக கூறியதையடுத்து  மருத்துவமனைக்கும், கோவிட்கேர் முகாம்களுக்கும் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அதைப்போன்று நேற்று 12 மணி நிலவரப்படி 301 நோயாகளும், 4 மணி நிலவரப்படி 343 பேர் என நேற்று ஒரேநாளில் 644 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு 108 ஆம்புலன்சை தொடர்பு கொண்ட போது அவர்களின் நோயின் தன்மையின்  அடிப்படையில் ஆக்சிஜன் தேவை படாதவர்களுக்கு கார் சிறப்பு ஆம்புலன்ஸ்கள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. அதன்படி கடந்த இரண்டு நாட்களில் 1,251  நோயாளிகளை மருத்துவமனைக்கும், கோவிட் கேர் சென்டருக்கும் அழைத்து  செல்லப்பட்டுள்ளனர்.

Related Stories: