தீவிரமடையும் கொரோனா 2ம் அலை!: ஆக்சிஜனை தொடர்ந்து 10,000 காலி சிலிண்டர் வாங்க தமிழக அரசு நடவடிக்கை..!!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலையை சமாளிக்க 10,000 காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறது. பல்வேறு தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வெளி மாநிலங்களில் இருந்தும் ஆக்சிஜன் கொண்டு வரும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 

ஒடிசாவில் இருந்து தமிழகத்திற்கு தங்கு தடையின்றி ஆக்சிஜனை கொண்டு வருவதற்காக ஒரியா மற்றும் இந்தி தெரிந்த 2 கண்காணிப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. இதனிடையே காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை கொள்முதல் செய்வதிலும் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஜெர்மன், பிரிட்டனில் இருந்து 900 சிலிண்டர்களும், சிங்கப்பூரில் இருந்து 200 சிலிண்டர்களும் ஏற்கனவே தமிழகம் வந்தடைந்தன. 

இந்த நிலையில் மேலும் 10 ஆயிரம் காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை கொள்முதல் செய்ய சிப்காட் மூலம் டெண்டர் கோரப்பட்டுள்ளது. குத்தகை முறையில் பயன்படுத்தப்பட்ட சிலிண்டர்களுக்கு மாதம் 500 வாடகையும், புதிய சிலிண்டர்களுக்கு 750 ரூபாய் வாடகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் டெண்டர் பெற்ற பின்னர், 7 நாட்களில் சிலிண்டர்களை விநியோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: