போதிய கையிருப்பு உள்ளது!: பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்..!!

சென்னை: போதிய கையிருப்பு இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அத்யாவசிய தேவைகளின்றி வெளியே வருபவர்களுக்கு அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், போதிய கையிருப்பு உள்ளதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தியுள்ளார். எழும்பூர் தனியார் பள்ளியில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியவர்கள் பார்வையிட்டனர். பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஆணையர் ககன்தீப் சிங், சென்னையில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை குறைந்திருப்பதாக தெரிவித்தார். 

சென்னை மாநகராட்சியில் தேவையான அளவு கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு இருப்பதாகவும் சென்னையில் 40 சதவீதம் அளவுக்கு மட்டும் பொதுமக்கள் தடுப்பூசியைய் செலுத்தி உள்ளனர் என்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் சென்னையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையர் குறிப்பிட்டார். 

Related Stories: