ஓசூர் அருகே மாநில எல்லையில் விதி மீறியவர்களை பிடித்து மாஸ்க் வழங்கி எச்சரிக்கை

ஓசூர்: தமிழக- கர்நாடக எல்லைப்பகுதியில் ஊரடங்கை மீறி தேவையின்றி டூவீலரில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்து மாஸ்க் வழங்கி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். கொரோனா 2வது அலை பரவலை கட்டுப்படுத்த கடந்த 10ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு காரணங்களை கூறிக்கொண்டு விதி முறைகளை காற்றில் பறக்க விட்டவாறு பொதுமக்கள் சாலைகளில் சகஜமாக சுற்றித்திரிகின்றனர். மாநில எல்லையான ஓசூர் பகுதியில் கண்காணிப்பு பணி முடுக்கி விடப்பட்டது.

அப்போது, கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு டூவீலர்கள் சென்றவர்கள், முகக்கவசம் அணியாமல் வந்தனர். அவர்களை அங்கிருந்த போலீசார் மடக்கி பிடித்து கடும் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், மாஸ்க் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுப்பி வைத்தனர். இதேபோல், தமிழக -கர்நாடக எல்லையான ஜூஜூவாடி வழியாக வரும் வாகனங்களை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கின்றனர்.

Related Stories: